நிறம் பெறுகிறது நிலா 1
கார்காலக் கனவாகக்
*** கண்மொழியில் கூடுவது ?
கற்பனையின் ஊற்றாக
*** கவிமொழியில் பாடுவது ?
தீராத இன்பமென
*** தேன்மொழியில் வாடுவது ?
பார்கின்ற பொழுதினிலே
*** பனிமொழியில் நாடுவது ?
தனியான பொழுதினிலே
*** தாய்மொழியில் சாடுவது ?
இன்பமிது என்றுசொல்லி
*** எம்மொழியும் எழுதுவது ?
*
*
*
இயற்றாத கவிஞனில்லை
இல்லாத உலகமில்லை - இதைப்
பாடாத புலவனில்லை
பழகாமல் வருவதில்லை - என்றும்
சுவையான சொந்தமிது
சொல்லுவதால் புரிவதில்லை ...!
...1994