தெரிந்தவர் தெரியாதவர்

உலகை அறிந்தவன்
உண்மையை புரிந்தவன்

உளவியல் அறிந்தவன்
உள்ளத்தால் தெளிந்தவன்

வன்மையை துறந்தவன்
பன்மையில் விளைந்தவன்

உண்மையாய் உழைப்பவன்
திண்மையாய் நடப்பவன்

நன்மையை விதைப்பவன்
நட்பினை மதிப்பவன்

களவினை வெறுப்பவன்
காமத்தை மறுப்பவன்

காதலை புகழ்ந்தவன்
கடமையில் நெகிழ்ந்தவன்

உடமையை பகிர்ந்தவன்
உலகினில் உள்ளனா?

தெரிந்தவர் கூறுங்கள்
தெரியாதவர் தேடுங்கள்

அன்புடன்
வை கலைவாணன்

எழுதியவர் : வை கலைவாணன் (6-Apr-16, 10:25 am)
சேர்த்தது : Drkalaivanan
பார்வை : 58

மேலே