மவிமு கட்சியின் ஆதரவு யாருக்கு

நிருபர்::::

அய்யா மது விரும்பிகள் முன்னேற்றக் கட்சி -ன்னு தேர்தல் நேரத்திலே ஒரு கட்சியை ஆரம்பிச்சிருக்ங்க? உங்க கட்சியிலே ஒவ்வொரு தொகுதிலயும் சுமார் உங்க கட்சியைச் சேர்ந்த 25,000 தீவிர உறுப்பினர்கள் இருக்கறதாச் சொல்லறீங்க. இந்தத் தேர்தல்ல உங்க கட்சி சார்பா எத்தன தொகுதிலெ உங்க கட்சி வேட்பாளர்கள நிறுத்தப் போறீங்க?

ம. வி மு, கட்சி நிறுவனத் தலைவர் மொடாக்குடி மாடசாமி:::

: நாங்க எந்தத் தொகுதிலயும் நிக்கற எண்ணம் எங்க கட்சிக்குக் கெடையாதுங்க. மதுவிலக்கை அமல்படுத்தறதைத் தடுக்கறதே எங்க நோக்கம், குறிக்கோள். வழக்கம் போல டாஸ்மாக் கடைகள் வாடிக்கையாளரின் நலனை முன்னிட்டு தங்குதடையில்லாமல் நடந்திட்டே இருக்கணும். குடிகாரர்களின் தாராள மனப்பான்மையால அரசாங்கத்த்தின் வருமானம் பெருகி நாடு செழிப்பா இருக்கணும். அதனால எந்தக் கட்சி ”மதுவிலக்கு தமிழகத்தில் சாத்தியமில்லை”ன்னு சொல்லுதோ அந்தக் கட்சிக்குத் தான் தமிழக குடிகாரர்களின் ஆதரவு. இதிலெ எந்த மாற்றமும் இல்லை.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
படம் நன்றி pmptnwordpresscom/tag/குடி-குடியைக்-கெடுக்கும்/

எழுதியவர் : மலர் (8-Apr-16, 7:08 am)
பார்வை : 106

மேலே