என்னை தவிர வேறு யாராலும் முடியவே முடியாது

எனக்கு உன் மேல் காதல் வியாபித்த தருணம்
உனை பார்க்க
எத்தனையோ முறை
எத்தனித்தேன்

ஆனால்
நீயோ
எனை
ஒரு விரோதியை
பார்ப்பது போலே
பார்த்து
எனை உயிரோடு
எரிக்கிறாய்

எனை தொலைந்து போ என்கிறாய்
நானோ உனை பார்த்த அன்றே
தொலைந்து போனேனடி உன்னில்.
இது வெறும் உயிரில்லா உடல் தானடி
நீ என்னை வேண்டாம்
என்றால் சவம் தானடி


நீ என்னை
தொல்லை என்று
நினைக்கிறாய்
நானோ உனை
தொலைவிலும் நேசிக்கிறேன்
தொல்லையிலும்
சுவாசிக்கிறேன்
தொடர்ந்து உனை
காதலிக்கிறேன்

சில வாரங்களுக்கு
முன்பு
எனை பார்க்க வா என்றாய் காதலி
நான் மகிழ்ச்சியில்
பறந்து விரைந்து
ஓடி வந்து பேருந்தின்
படிக்கட்டுகளில்
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தேன்
ஊஞ்சல் கயிறு அறுக்கப்பட்டது போல்
உனை நினைத்துக் கொண்டே கம்பியை பிடிக்க தவறிவிட்டேன்

கீழே விழுந்து
காலில் எலும்பு முறிந்தது
மயக்கத்தில்
மருத்துவமனையில்
மருத்துவரின்
அறிவுரை
இன்னும்
ஒரு வாரத்திற்கு காலை
அசைக்கவே கூடாது

மீண்டும்
உன்னிடம்
இருந்து
அழைப்பு
ஏன் இவ்வளவு
நேரம் ஆகியும்
வரவில்லை ?

நான்
நடந்ததை சொன்னால்
நீ கரைந்திடுவாய்
என்று
கல்லாகி
வெளியே இருக்கிறேன்
வேறு வேலையாக என்று
துண்டித்துவிட்டேன்

அன்றிலிருந்து
அன்றில் நீ
என்னிடம்
பேசுவதே இல்லை

நீயோ என் நினைவுகளையே
(நிழலையே )
பாரமாக வெறுக்கிறாய்

கதவை திறக்க எழுந்து வந்தாய் ஓர் நாள்
மெத்தையில் இருந்து
உடனே சடாரென்று
மயங்கினாய்
நான் ஓடிவந்து
தரையில் நீ
இடித்துக் கொள்வதற்கு
முன் தாங்கிக்கொண்டேன்

நானோ உன்னையே
சுகமாக சுமக்கிறேன்
உனக்கே தெரியாமல்

நீ தெரிந்து கொள்ள வேண்டும்
நீ அறிந்து கொள்ள
வேண்டும்
என்று
நான் எதுவும்
செய்வதல்ல

நான் என்ன அரசியல்வாதியா
விளம்பரப்படுத்திக்
கொள்ள

உன்னில் பாதி
என்னில் நீ பாதி
மீதியும் நீயே(சம உரிமை கூட தரா ஆண் வர்க்கத்தில் உனக்கு முழு உரிமையாய் என்னையே தந்தவன் நானடி )
ஆதியும் நீயே
ஆனால் அந்தம் மட்டும்
சத்தம் இல்லாமல் நானே நானே உன் சந்தத்தில் (தாலாட்டில்)

உனக்கு எது நல்லதோ
அதையே நான் செய்கிறேனடி
நித்தம் உன்னையே நேசிக்கிறேனடி
நீ என் வாழ்க்கையில்
இல்லை என்றால்
நானே இல்லையடி
(என் வாழ்க்கையே
தொலைந்ததடி)

நான் உன்மேல் வைத்திருக்கும்
என் காதலின் நம்பிக்கையில்
கூறுகிறேன்

என்னைத் தவிர
வேறு யாராலும்
உனை
இந்த அளவிற்கு
பார்த்துக் கொள்ளமுடியாது

எனக்கு என் சந்தோஷத்தை விட
உன் சந்தோஷமே முக்கியம்

யோசித்து முடிவெடு


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (9-Apr-16, 12:27 pm)
பார்வை : 337

மேலே