தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 27 - = 68
கண்டதும் காதலா…
கண்ணனே உனக்குதான்
மோகமும் தாகமும்
நெஞ்சிலே மோதுதா..
என்னை நீ பார்க்கிறாய்
உன்னை நான் பார்க்கிறேன்
இடையில் திரை எதற்கு
இன்பமே வழி நடத்து..
இதழோடு இதழ் பதித்து
இன்ப லோகம் காணலாம்
மன்மத மயக்கத்தால்
மலர்கணை போடலாம்
பூந்தென்றல் காற்றில்
மேனியெங்கும் குளிருமே
அணைக்க நீயிருந்தால்
சுகம் நூறு பொங்குமே
கண்ணிலே கொஞ்சியே
கவிபாடும் வஞ்சியே
நாடுவேன் உன்னையே
சூடுவேன் பூமாலையை..
உன் பொன் சிரிப்புகள்
எனை மயக்கும் தேனரும்புகள்
நான் வைரக்கல்
தீட்டினால் சைனிங் ஏறுது பார்..!
நீதியின் தேவனே
நீந்தி வா நாதனே
ஒன்று சேரலாம் வாழ்விலே
ஒரு மனதாகலாம் எதிலுமே..!
இந்த வாழ்க்கையே போலிதான்
அதை வாழ்ந்து பார்க்கனும் ஜாலியாய்
நம்மில் வேட்கைகள் இல்லையெனில்
வாழும் வாழ்க்கையே மூலிதான்..!