தேர்தல் தலைகள்

கொடி பிடித்துக் அணி திரட்டி
குரலடைக்கப் பேசுவார்
நொடியிலிந்த நாட்டுக்கொரு
விடியலென்று கூவுவார்

நடித்து வந்த நடிகையர்க்கு
நல்ல பாதை காட்டுவார்
படித்து வந்த இளைஞருக்கு
பதவி என்று கூறுவார்

படிப் படிடாய் ஏறி இறங்கி
படியளந்து செல்லுவார்
எடுபிடியாய் ஏய்த்துக் கட்ட
ஏழைகளைத் தேடுவார்

மக்களோடு மக்கள் என
மாயவார்த்தை பேசுவார்
சொற்களோடு சுவை கலந்து
சொக்க வைத்துச் செல்லுவார்

மானமற்ற வாழ்வுஏது என
மங்களங்கள் பாடுவார்
ஊனமுற்ற உணர்வுகளை
ஒளித்து வைத்து உலவுவார்

கல்லினிலே நாருரித்து
கடந்ததெங்கள் காலமும் அவர்
சொல்லினிலே விதி தொலைத்து
வீழ்ந்ததெங்கள் வாழ்க்கையும்

ஆளுக்கொரு வழி சமைத்து
அணைத்திருப்பார் காசையும்
கூழுக்கொரு ஆசை வைத்து
மழித்திருப்பார் மீசையும்

நாடி வந்து நற் கதை பகிர்ந்து
நாணயமாய்ப் பழகுவார்
கோடியென்று லட்சமென்று
கோவணத்தை உருவுவார்

மாறி மாறிப் பேசி விட்டு
மாருதியில் ஏறிட நாம்
தாறுமாறாய் கையைத் தட்டி
தலை குனிந்து வாழ்வதா

கற்ற கல்விப் பேறை வைத்து
காப்போம் எம் நாட்டினை எமை
விற்றுப் போகும் மூடராட்சி கலைத்து
விதைப்போம் வீடு பேற்றினை

எழுதியவர் : சிவநாதன் (9-Apr-16, 5:07 pm)
Tanglish : therthal Thalaigal
பார்வை : 498

மேலே