பாசம் - கற்குவேல் பா
பால்யத்தில்,
மழை பெய்து முடிந்திருந்த அந்நாளில்,
நீயும் நானும் ஒன்றாய் அமர்ந்து.
மேலத்தெரு முனியாண்டி விலாசில்
புரோட்டா தின்று கொண்டிருந்தோம்..
எங்கிருந்தோ ஓடி வந்த நண்பன்,
" உன் தாத்தா இறந்துட்டாருடா " என்று
செய்தி சொல்லுகிறான் ;
நான் உன் முகத்தையும் - நீ
என் முகத்தையும் பார்த்துக் கொண்டே,
கடைசியாயிருந்த கையளவு புரோட்டாவையும்
ஒரே வாயில் அப்பிக் கொண்டு - விக்கலுடன்
ஓடி வீடு அடைகிறோம் - ஒருவேளை
தாத்தா இருந்திருந்தால்,
தவறாமல் கொடுத்திருப்பார் தண்ணீர் !
#பால்யம்
#முதுமை
#பாசம்