தனிமை

தனிமை

கற்பனையில் தோன்றுவதெல்லாம்
காட்சியாய் காண்பதில்லை
காட்சியாய் காண்பதெல்லாம்
கருத்தினில் நிற்கவில்லை
கருத்தினில் நிற்பதெல்லாம்
கண்ணுக்கு தெரிவதில்லை
கண்ணுக்கு தெரிவதெல்லாம்
மனதுக்குள் பதிவதில்லை
மனதுக்குள் பதிவதெல்லாம்
நினைவினில் நிற்பதில்லை
நினைவினில் நிற்பதெல்லாம்
நெஞ்சத்தை உருக்கவில்லை
நெஞ்சத்தை உருக்கியதெல்லாம்
சொல்வதற்கு வார்த்தையில்லை
சொல்வதற்கு உள்ளதெல்லாம்
கேட்பதற்கு யாருமில்லை .....

தனிமை இனிமை என யார் கூறினார்

எழுதியவர் : கே என் ராம் (9-Apr-16, 10:47 pm)
Tanglish : thanimai
பார்வை : 272

மேலே