பெருங்'குடி"மகனின் ஆறுதல்
தமிழகத்தில் மதுவிலக்கை
படிப்படியாய்
அமல் படுத்தினால் என்ன
ஒரே கையெழுத்தில் மதுவை
ஒழித்துக்கட்டினால் என்ன?
@
பத்தடி நடந்து சென்றால்
பாண்டிச்சேரி என்றழைக்கப்பட்ட புதுச்சேரி.
அங்கு சென்று ஆசைதீர
மதுவருந்தி போதை தெளிந்து
மதுநாற்றம் போகும்வரை
அங்கிருந்து விட்டு இல்லம் வந்துசேரத் தெரியாதா எனக்கு?
@@@@@
@@ பெருங்"குடி'க் கவிஞர்
கோட்டக்குப்பத்தான்