எண்ணத்தில் துளிர்த்தவை 10

தேர்தல் காட்சிகள்
**************************
முகமறியா முகங்கள் வந்திடுவர்
முகவரித் தேடி வாசலில்
வேட்பாளர்கள் 1
கட்சிகள் பிளவுப்படும் காலையில்
காட்சிகள் மாறிடும் மாலையில்
உட்கட்சிப்போர் 2
இலட்சியங்கள் கானல் நீராகுது
இலட்சங்கள் கோடிகள் ஆகுது
கொள்கைகள் 3
அருகில் இருந்தும் பார்க்காதவர்
ஆர்வமுடன் வருவார் படையுடன்
பிராச்சாரம் 4
பாரா முகமாய் இருந்தவர்களும்
பரவசம் அடைவர் கட்டியணைத்து
புதியகூட்டணி 5
பழனி குமார்