கண்ணாடி என்றும் பொய் சொல்வதில்லை
உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி!
அனுதினமும் அனைவரும் அதிக நேரம்
கண்ணாடி முன்நின்று கள்ளுண்ட போதையென
உச்சிமுதல் உள்ளங்கால் வரை உற்று
உற்றுப் பார்க்கத் தவறுவதில்லை!
அங்குமிங்கும் திரும்பி அழகு பார்த்தாலும்
ஒய்யாரமாய்த் நின்று உற்றுப் பார்த்தாலும்
சிகைஅழகும் சிங்கார முகஅழகும் பார்த்தாலும்
கண்களுக்கும் இமைகளுக்கும் மையிட்டுப் பார்த்தாலும்
என் அழகைச் சொல்லடி கண்ணாடியே!
உள்ளதை உள்ளபடி சொல்லிடும் கண்ணாடி!
நிற்கும் ஊமையாய் பூச்சுகளின் சாட்சியாய் – என்றாலும்
கன்னியர் எண்ணிடுவர் தாம்தான் உலகஅழகி என்றும்,
எல்லோர் கண்களும் தங்கள் அழகிலேயே
மொய்க்கும் என்றும் - ஆனாலும்
கண்ணாடி என்றும் பொய் சொல்வதில்லை!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
