உடல் தானம்-உயர் தானம்

கிளையுதிர்ந்த மலர்கள் என்றும்
கிளை சேர்வதில்லை
ஆனாலும்
மங்கையரின் கூந்தலினை
மறுபடியும் சேர்வதுண்டு…!

பயிர் விளைந்த தானியங்கள்
பயிர் சேர்வதில்லை
ஆனாலும்
அடுத்தபோகம்
வயல் சேர்வதுண்டு…!

உடல் உதிர்ந்த உயிர் என்றும்
உடல் சேர்வதில்லை.....
ஆனாலும்
உடல் உறுப்பு தானத்திலே
புதுஉயிர் சேர்வதுண்டு…!.

உடல் உறுப்பை
தானம் செய்வோம்
பிறரின் உடலோடு
உயிராவோம்..!

வாழும்வரை
உடலோடு நாமிருப்போம்.
இறந்தபின் பிறரின்
உயிராக நாமிருப்போம்…
இறந்தாலும் உயிரை
என்றும் இருக்க வைப்போம்..!

சாதி மதமில்லா
சமத்துவத்தை
உடல்தானத்தில்
சாதித்திடுவோம்...!



(என் உடல் உறுப்புகள், 5 வருடங்களுக்கு முன்பே உறுப்பு தானத்துக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.)

எழுதியவர் : க.அர.இராசேந்திரன். (12-Apr-16, 8:04 am)
பார்வை : 2300

மேலே