தந்தைக்காக
நானும் நீயும்...
கனவுகளை சுமந்து ....
ஒருவர் கையை மற்றொருவர் பிடித்து...
நான் கையில் குச்சி மிட்டாயோடு
நடந்த அந்த காலம்...
விளையாடும் போது கூட...
நான் தோற்க கூடாது என்று நீ ....
எனக்காக தோற்ற காலங்கள்....
நான் தேர்வில் தோற்றதற்கு...
எனக்காக நீ அழுத அந்த...
ஆறுதல் காலங்கள்...
புளியங்காய் எட்டவில்லை என்று...
உன் தோள் மீது எனை ஏற்றி...
எனக்காக எனை சுமந்த
அந்த காலங்கள்...
நல்லவை கெட்டவைகளை
எனக்குணர்த்தி..
என் வாழ்வை உயர்த்தி கொள்ள..
எனக்க நீ உழைத்த...
அந்த காலங்கள்...
எனக்காக நீ படித்து...
அதை எனக்குணர்த்தி...
கல்வியாலும் எனை உயர்த்த...
நீ கஷ்டப்பட்ட !
அந்த காலங்கள்...
என் வலிகளை உன் வலிகளாய் ..
நீ தாங்கி....
உன் மார் மீதும் தோள் மீதும்....
எனை தாங்கிய...
அந்த காலங்கள்....
அன்னை எனை அடிக்கும் போதும்...
அன்பாய் எனை அரவணைத்து...
ஆறுதலாய் நீ...
இருந்த அந்த காலங்கள்...
தோல்விகள் எனை தொடர்ந்த போதும்...
தோள் கொடுத்து எனை தூக்கிவிட்ட..
அந்த காலங்கள்...
என்னை உருவாக்க...
உலகத்தில் உயர்வாக்க....
உன்னையே உருக்குளைதுக்கொண்ட....
உருக்கமான அந்த காலங்கள்....
இன்று நான் !
உயர்ந்து உலகில் நிமிர்ந்து
நிற்கையில்...
என் கண் முன்னே நிற்கிறது....
ஒரே ஒரு கேள்வி?
என் உயிரே...
என் உடலே...
என் சிந்தையே..
என் அன்பு தந்தையே...
என கைம்மாறு செய்யபோகிறேன் உனக்கு...
இந்த உயர் வாழ்வை எனக்களித்த...
உனக்கு...
என் உயிர் கூட கைமாறாக போதாதே...
அப்பா !
இன்று கூட நீங்கள் வீட்டில் இருந்தாலும் ....
என் இதய கூட்டில்தான் இருகிறீர்கள்......
இதோ இன்று ...
நான் கொண்ட அனைத்தும்...
உன் காலடியில் சமர்பிக்கிறேன்...
ஆயிரம் கடவுள்கள் ஒரு..
அன்னைக்கு சமம்...
ஆயிரம் அன்னைகள் ஒரு...
தந்தைக்கு சமம்...