மன மாற்றம் ..!

13.5.2011 அன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது எழுதிய கவிதை ..நேரமின்மை காரணமாக உடனே பதிவு செய்ய முடியவில்லை ..

இன்று...!
சூரியன் மறைந்தது..!
இலையும் துளிர்த்தது..!
ஓநாய் கூடத்திற்கு ஓய்வு.!
செந்நாய் கூட்டதிற்கு
இந்நாள் முதல்
மண்ணாளும் வாய்ப்பு .!

முதல் குடிமகளே..!
முன்னாள் ! முன்னால்
செய்த தவறுகளை விலக்கி
முன்னாள் பினனால் இருந்து
இயக்கியவரை ஒதுக்கி ,

பின்னாள் பின்னால்
அறையின் முன் அமர்ந்து
தனிமையில் எண்ணாமல்
இந்நாள் முதலே
இன்முகத்தோடு --இன்னொரு
வாயிப்பளிதவர்களின் இன்னல்களை ,

முன்னாலே கேட்டு ,
முன்னாலே முன்னாளே முடிவெடுத்தால்,
இந்நாளே இனியநாள் ..!
இனிவரும் நாள் எல்லாம்
நன்னாள்..! பொன்னாள்..!!
நீ! புரிந்துகொள் இந்நாள் ..!!!

முன்னாள் ! கதிரவ குலத்தில்
உறவுகள் கோலோச்சின.!
விளைவு.! இந்நாள் முக்காடோடு
முன்னாள் முதல் மனிதர்.!

பின்னாள் பின்னால்
நிகழப்போவதை முன்னால் உணரும்
முன்னாள் முதல் குடிமகன்
இந்நாள் , முன்னாள்
விதைத்த வினையை
அறுவடை செய்துகொண்டும் ,

ஆறுதல் காவியம்
எழுதிக் கொண்டும் ,
சிறை வாயிலில்
குறையோடு வரும் உறவை ,
முறையாகக் கேட்டு
விரைவாக விடைக்காண முயலும்
தெளிவான புதிர் மனிதர்..!

உன் தவறுகளை உணர்.!
தறுதலைகளை தவிர்.!
குடும்பமே குழப்பத்திற்கு
காரணம் என்பதை உணர்..!

போற்றுவோர் சிலர் .!
துற்றுவோர் பலர் .!
உள்ளம் கிளர்..!
திருவாய் மலர்..!

கெட்டுப்போனது உண்மைதான் .!
முழுதாய்ப் பட்டுபோகவில்லை !
படிப்பினையை படியாக்கு.!
இனியாவது பாமரனை
பந்தாடுவதை நிறுத்து .!

வார்த்தை வித்தகா.!
வாய்மை செத்ததாக
வரலாறு இல்லை,
ஒத்துக் கொள்.!

தலைவனாக தலை நிமிர்.!
விட்டுப்போன வெற்றி
மீண்டும் தொட்டு சிரிக்கும் .!
பட்டுப்போன செடியும்
மீண்டும் கண் பட்டுப்போகும்
அளவு வளர்ந்து செழிக்கும் .!

எழுதியவர் : வசிகரன்.g (18-Jun-11, 3:48 pm)
பார்வை : 369

மேலே