உடுப்பிட்டி சின்னத்தம்பிப் புலவர் பாடல்

பாடும் வித்தை மட்டுமன்றி இராக தாளங்களிலும் வல்லவராகிய இவரது பாடல்கள் சொற்சுவை பொருட்சுவைகளாற் சிறந்திருந்தன.

இவர் செய்த விருத்தம் ஒன்றை கீழே பாருங்கள்.

ஏரேறு பரிதியுட னெழிலேறு மமரர்களு
மேழேறு முனிவருமலா
தியலேறு மதிமுதலா யிவரேறு துதிகள்செய
வினிதேறு கயிலைமலையில்
வாரேறு தனமதனின் மணியேறு பணியணியும்
வகையேறு மலைமகளுடன்
வயமேறு முலகதனி னயமேறு முயிர்கணிதம்
வாழ்வேற வீற்றிருக்கும்

காரேறு கடுமிடறொ டேறேறு கடவுளது
கண்ணேறி வந்தபுலவர்
கழலேறு பதமதெனு நிழலேறி யெனதுதுயர்
கரையேற வருடருகுவாய்
தாரேறு கன்னலொடு செந்நெல்விளை நெல்வயற்
றங்குடுப் பிட்டிநகரிற்
சந்திர குளத்திலம ரெந்தையே வந்துனரு
டருவீர பத்ரதேவே.

எழுதியவர் : (16-Apr-16, 5:00 am)
பார்வை : 54

மேலே