அன்னக்கிளி உன் நினைப்பில்
அன்னக்கிளி
உன் நினைப்பில்
அன்னம் தண்ணி
நான் தவிர்த்தேன்.....
நீயின்றித்
தவித்தேன்.....!!
காதில் விழாத
என் கானம்
கண்முன்னே தோன்றும்
கானல்
என்றாகிப்போனதோ.....?!
காலம் பதில்
சொல்லும் என்று
நானும்
காத்திருப்பேனோ......?!
உன் நெஞ்சைத்
தொடும்
வார்த்தைகளை
சொல்லி.....
வளைத்துப் போடவில்லை
நான்..... நெஞ்சோடு
நெஞ்சு
கலந்த.....நீங்காத
நேசம் தானே
நான் கேட்பது......!!
போதை ஏற்றி
பாதை
மாற்றும் மது
அல்ல காதல்......
தவறிய
பாதையை
சீரான வழிக்கு
இட்டுச் செல்லும்
தெய்வீகம்.....!!
என்ன நினைத்து
பாடுகிறாய்
குயிலே.....?
உன்
குரலில் என்னை
நினைத்து
சுகமாய் ஒரு
கானம் பாடு......!!
ஆழ்மனத்தின்
அவஸ்தைகளை
எல்லாம்
அள்ளிக்கொட்டிப்
பேசிட.....
ஆண்டவனே
நீதந்த
இந்த ஆயுளும்
போதாது......!!
நந்தவனப்
பூவொன்று.....
வாசம்
தொலைத்து
நிற்குது.....!!
ராமன்
சீதை
பிரிந்த
வலியை மிஞ்சும்
என்
வாழ்க்கை.....
வலிகளால்
விஞ்சி நிற்குது......!!
மாலையில்
வாட்டும்
வேதனை.....
காலையில்
இன்னும் இங்கே
கூடுதடி......உன்னை
நினைக்காமல்
நகரும்
நிமிஷங்கள்
எனக்கில்லை.....!!
காதலின்
ராஜாங்கத்தில்
ஏற்றத்தாழ்வு
இல்லையடி.....
இனிதான
வாழ்வு.....இதைவிட்டால்
உனக்கேது......?

