தற்பெருமை

ராமசாமி ஒரு பெரிய பணக்காரர்; மிகவும் தற்பெருமை கொண்டவர். தன் குடும்பப் பெருமைகளைப் பற்றியும் தன் செல்வ வளங்களைப் பற்றியும் எல்லோரிடமும் பீற்றிக்கொள்ளுவதுதான் அவர் வழக்கம்.

அவரிடம் செயலாளராக வேலைக்கு அமர்ந்தார் நம்ம முருகேசு.

ஒரு நாள் புதிய விருந்தினர் ஒருவர் வந்தார். அவரிடம் வழக்கம்போல தன் பெருமைகளை சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த ராமசாமி, முருகேசுவை அழைத்தார்.
“உள்ளே போய் அந்த 1000 வருஷத்து பழைமையான ஓவியத்தை எடுத்துக்கிட்டு வா” என்றார்.

முருகேசுவும் போய் எடுத்துக்கொண்டு வந்து காண்பித்தார்.

அதைப்பார்த்து அசந்துபோனார் விருந்தாளி.

அவர் போனதும் முருகேசுவைக் கூப்பிட்ட ராமசாமி, “ஏண்டா உனக்கு அறிவே இல்லையா? நான் 1000 வருஷத்து ஓவியம் அப்பிடீன்னவுடன், நீ ‘எது சார். லண்டன் ஓவியமா? இல்லை சீனா ஓவியமா?’ அப்பிடீன்னு கேட்டிருக்கவேண்டாமா? நீயா ஒண்ணைக் கொண்டுவந்து காமிக்கிறே? நான் ஒண்ணே ஒண்ணுதான் வச்சிருக்கேன்னு அவன் நெனைச்சிக்கிட்டு போயிருப்பான்” என்று கடிந்துகொண்டார்.

மறு நாள் ஒரு விருந்தினர் வந்தார். வழக்கம்போல அவரிடம் பெருமையடித்துக்கொண்டிருந்த ராமசாமி, முருகேசுவைக்கூப்பிட்டு, “ உள்ளே போய் எங்க அப்பாவுடைய படத்தை எடுத்துகிட்டு வா” என்றார்.

“எது சார்? லண்டன் அப்பாவா? இல்லை சீனத்து அப்பாவா?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (17-Apr-16, 11:16 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : tharperumai
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே