என்னம்மா இப்பிடி பண்ணறீங்க
![](https://eluthu.com/images/loading.gif)
வஞ்சரம் என்ன வெல?
@@@
கிலோ ஆயிரத்து ஐநூறு ரூவா.
@@@
கிலோ ஆயிரத்து ஐநூறா? என்னம்மா இப்பிடி பண்ணறீங்க? இது ரொம்ப அநியாயம். நாஞ் சோறு சாப்பட ஆரம்பிச்ச நாள்லே இருநது தெனமமும் மூணு வேளையும் மீனுக் கொழம்பு, வருவல் சுட்ட கருவாட தின்னு வளந்தவம்மா.
@@
அது மல மாதிரி நீ வளத்திருக்கற ஒடம்பே சொல்லுதே. யோவ் உனக்கு ஒடம்பு வளந்த மாதிரி அறிவு வளரல.
@@@
என்னம்மா இப்பிடி சொல்லற?
@@@@
இப்ப மீன் பிடி தடைக் காலம்னு உனக்குத் தெரியுமா தெரியாதா?
@@@
நா எட்டாம் வகுப்பு வர படிச்சவன். மீன் பிடி தடைக்காலம்னு எனக்கு தெரியாம இருக்குமா?
@@@@@
ஆமாய்யா நீ ரொம்ப அறிவாளி தா. உசிரப் பணயம் வச்சு வஞ்சரம் மீனுங்கள பிடிச்சிட்டு வந்தாங்க எம் பையனும் என்னோட புருசனும். நீ என்னோட நாப்பது வருச வாடிக்கையாளன். பாவம் பரிதாபம் பாத்து உனக்கு ஆயிரத்து நூறு ரூபாய்க்குத் தர்றேன்.
@@@
என்னம்மா இவ்வளவு வெல சொல்லறீங்க? எங்கிட்ட நூறு ரூபா தான் இருக்குது.
@@@
சரி சரி அதுக்கு ரண்டு கூறு நெத்திலி கருவாடு எடுத்துக்கா.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படம் நன்றி:shadiqahblogspotin