காணல் பிழை

கோணங்களில் காட்சிகள்
வித்தியாசப்படுகின்றன
இவை காட்சிப் பிழையல்ல
காணல் பிழைகள்
காண்பவை காணும் விதத்தில்
ஒன்று இன்னொன்றாய்
தெரிகையில்
அர்த்தங்கள்
அனர்த்தங்களாகிடும்
விந்தை
கண்களுக்குள் சுற்றிடும்
தட்டாமாலை
நம்மை சுழற்றிடும் குழப்பத்தில்
காணல் பிழைகள் - மனக்
கோணல் பிழைகளாக மாறாத போது
அழகியல் வடிவங்களாக
நிலைபெறுகிறது ஓவியங்களாக