சொல்லத்தான் நினைக்கிறேன்- கண்ணம்மா கவிதைகள்

சொல்லத்தான் நினைக்கிறேன்- "கண்ணம்மா கவிதைகள்"
**************************************************************************************

அருகில் வந்திட்டு மாமா :D
என அழைத்தாள்
நானும்
ஒரு கையில்
சிகரெட்டை பிடித்தபடி
புஸ்த்தகம் வாசித்துக் கொண்டே
ம்ம்ம்ம் என்றேன் ,,

மாமா :/ என கொஞ்சலின் மிரட்டல் மெருகேற
பருமனாக உப்பிய
என் வயிற்றை
இரு உள்ளங்கைகளால்
அப்பிக்கொண்டு
லேசாக தட்டினாள்
சிகரெட் காரம் உள்ளேற
இருமிக்கொண்டே
என்னடா பாப்பூ சொல்லுடா சக்கரை என்றேன்

உங்ககூட வேலையில இருக்காங்கல்ல :D
என ஆரம்பித்தாள்
யாரு என்றேன் ..
அதா மாமா
உங்க கூட அன்னைக்கு காருல வந்தாகல்ல :o
ஹோ ஆமா,, அவங்களுக்கென்ன
அவுங்க எப்படி ம்ம்ம்,, :O
அவுங்கள விட நா அழகா இருக்கேனா ம்ம் :D

இரு உதடுகளையும்
அம்ம்ம்மென்று
உள் மடக்கிக்கொண்டு
ஆட்காட்டி விரலால்
என் வலதுபுற மீசை சொறிந்தவன்
ம்ம்ம் அவுங்க,,
எதையும் பெருசா
ஆச்சிரியமா பிரமிப்பா
எடுத்துக்கமாட்டாங்க ,,
எல்லாத்தையுமே
ரொம்ப சாதாரணமா எடுப்பாங்கமா ம்ம்
என்றேன் ,,

அப்போ நானு அப்போ நானு,,
அந்த மாதிரி இல்லையா :(
நானு அறிவாளி இல்லையா ம்ம் :(
அப்போ உங்களுக்கு என்னை பிடிக்காதா :/ ,,,
நீ போ நீ போ ம்ம் :/
போயி அந்த
படிச்ச பொண்ணுக்கூடயே பேசு ம்ம் :/
என கோவித்து

பாவம்
வாங்கி பலமுறை
அவள் முத்தங்களாலும்
என் முதுகினாலும்
அணைத்து அணைத்து
அங்கம் விழுந்து
இளமைத் தொலைத்த
இலவம் பஞ்சு தலையணையால்
விளாசி அயர்ந்தவள்
கட்டிலில் குப்புறவிழுந்து
முகத்தை மூடிக் கொண்டாள்
அறையின் பௌர்ணமி
அஸ்தமித்ததைப் போல ம்ம்ம்
திருவிழா தொலைத்த நகரம்போல
அப்படியொரு இருட்டு எனக்குள்
அந்த நாடகம்
ஒரு நொடிதான் இருப்பினும்
அவள் கொலுசு சத்தத்தை
அக்கணம்
கொன்றுவிட்ட
சில்சிலிகளின் மேல்
ஏனோ தீராக் கோபந்தான் ம்ம்ம் ,,

அடிப்பைத்தியக்காரி,,,

பிறந்த குழந்தையை
முதல் முதலாக
வெளியில் கொண்டு போகிறபோது,,
முட்டைக் கண்களை உருட்டி
அங்கும் இங்கும்
பெயர்த் தெரியாத
நிறங்களையும் மரங்களையும்
சாலை இரைச்சல்களையும்
புதிய முகங்களையும்
கண்டு வியப்பதைப்போலத்தானே
நீயும் வியப்பாய் ம்ம்
குழந்தைதானேடி நீ எனக்கு ம்ம்ம் ,
உன் உலகமாக
நான் இருக்கிறவரை
என்னையே சுற்றி வருவாய்தானே ,,
வழக்கமாக
திருவிழாக்களில்
வீதித் தேர்தான்
கோயிலைச்சுற்றி உலா வரும்,,
இதோ இங்கொரு கோயிலே
வீதித்தேரைச் சுற்றி
உலா வருகிறமாதிரி இருக்கு தெரியுமா ம்ம்
நீயும் உன் வாண்டுத் தனமும்
நிமிடத்திற்கு நூறுமுறை
மாமா மாமா என்று
என்னைச் சுற்றி வருகிறபோது ம்ம்,

ஞாபகமிருக்கா ம்ம்
ஊரே உன்னை நேசித்தபோது
நீ என்னை நேசித்தாய்
என் அழகான பொய்களாலே
உன்னிடம் கவிதை வஞ்சித்"தேன்"
உனக்குப்பிடித்த
என்னைப் பார்க்காமல்
உன் பார்வை முழுவதையும்
கீழே இறைத்துச் செல்கிறாயே என்றிருந்தேன்
உன் பார்வையும்
உன் பாதப் பிரதட்சணங்களும்
என் அடிச்சுவடுகளின் மேல் தான்
என்றுக்கூட தெரியாத முட்டாள் தானே நான் ம்ம்

அதுவரை
பிடிக்காத கோயிலுக்கும்
நுழையாத நூலகத்திற்கும்
நெற்றியில் பட்டையோடும்
படிக்காத புஸ்த்தகங்களோடும்
தேவியை தரிசிக்கவா
முற்றுகையிடுகிறேன் ம்ம்
என் தேவி தரிசனத்திற்குத் தானே சொல்

போ மாமா ம்ம்
உன்னைப்போல அழகான
கையெழுத்தும்
கவிதை எழுதவும்
வரவே மாட்டேங்குது :/
என தோள் சாய்ந்து
சீனி புளியங்காயை மென்றபடியே
முனங்குகிறாள் ம்ம்
அடிக்கழுத ஹாஹ்ஹாஹ் ஹாஹ்
எனக்கென்னடி ம்ம்
வெறும் கவிதை எழுதத்தான் தெரியும்
உனக்கொரு
விஷயம் சொல்லட்டுமா ம்ம்
உன் பார்வையின்
ஒருமுறை திரும்புதலாலே
அங்கிருக்கும் அத்தனைப் பேரையும்
கிறங்கடிக்கச் செய்கிற
உனக்கு மட்டுமே தெரியும்
ம்ம்ம் ,, திளைக்கத் திளைக்க
"காதலிப்பது எப்படி என்று ம்ம்ம்ம்"

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (19-Apr-16, 5:37 am)
பார்வை : 422

மேலே