பாடாத பாடல்

அழகின் விழியான
மலர்களில் இருந்து
மொழி மாற்றம்
செய்யப்பட்ட சூரிய
கிரணத்தைத் தவிர
இப்புவி சார்ந்தது
எதுவுமில்லை

இந்த நந்த வனங்களில்
பனித்துளியான வைரக்
கற்களில் இருந்து துள்ளிக்
குதிக்கும் வைகறை தவிர
இவ்வுலகுக்குரியது
ஏதும் இல்லை

அடர் வனம் இதிலே
ரீங்கரிக்கும் புள் பூச்சிகளின்
குரல் ஓசை இதய ஓசையாய்
எதிரொலிப்பது தவிர
இப்பூமிக்கு உரியது
எதுவும் இல்லை

இந்த சங்குக்குள்
முணுமுணுக்கும் ஓங்கார
மந்திரம் இருப்பதும்
இன்னும் இருந்து கொண்டே
இருப்பதும் தவிர இத்
தரைக்குரியது
எதுவும் இல்லை

அத்தனை மலர்களும்
மொத்தமாய் குவிந்த அழகும்
அன்பினைப் பட்டியல் இட்டும்
உள்ளத்தில் சிட்டிகை போட்டும்
ஏனோ தூரமாய்த் தெரியும்
அந்த உலகம், அந்தோ
நாடோடி விண்மீன்
பாடாத பாடலாய்
எதிரொலிக்கும்

ஜேஜே.

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (20-Apr-16, 7:47 am)
Tanglish : paadatha paadal
பார்வை : 155

மேலே