மாசில்லா மானுடம் கண்டேன்

காலங்கள் கரைந்தோட, மேகங்கள் மேனியைதொட்டோடுகையிலே
தென்றலின் சாரல் சரிரத்தைத் தீண்ட,
அந்திபொழுதினிலே ஆகாயம் செங்காந்தல்மலராய் சிகக்ககண்டேன்!
நெகிழும் மலர்களின் மனம் அவிழ்கையிலே;
சின்ன சித்திரமாய் சிட்டுக்குயில் இசை கேட்கையிலே ;
வண்ண மயில் தோகை விரித்தாடக்கண்டேன் !!
நீலவாய் கடலவன் கண்ணனுக்கு குளிர்சினல்கயிலே;
முத்தும் பவளமும் ஆழ்கடலை அலங்கரிக்கையிலே ;
கயல்வ்ழிகளெல்லாம் கண்டு ஆனந்தம் கொள்ளக்கண்டேன்!
பசுமை நிறைகாடெல்லாம் படுதுன்பம் போக்கையிலே;
புல்லிமானன்று புலியிடையே பாசம் பிணைக்கக்கண்டேன்;
குரோதமுடை சர்ப்பங்கள் உயர்களிடையே காதல் கொள்ளக்கண்டேன்!
மாந்தரால் நிறைப்பெற்ற வையமான மணிநகரிலே;
பிணியோரின் நோய்யாவும் தகர்ந்து போகையிலே ;
சாதிமத குலகோத்திரங்கள் அழியக் கண்டேன்!!
அகிலத்தை அன்பும் அ றிவும் ஆள்கையிலே ;
அரக்ககுணமுடையோர் அன்புடையோறாய் ஆக்கம் பெருகையிலே;
மனிதரும் உயிர்களும் ஒன்றிணையக் கண்டேன்;
வறுமைகளை வாகை சூடிய வையத்திலேநான் வாழகண்டேன் !.....
-காமேஷ்

எழுதியவர் : kamesh (20-Apr-16, 8:04 pm)
பார்வை : 128

மேலே