மறையும் வேதனை
கண்ணில் குடியிருக்கும் கலையழகை
==காகித மில்லாமல் வரைந்தபடி
தண்ணீர் சிறகடிக்கும் ஜலப்பறவை
==தழுவத் துடிக்குதந்த பகல்நிலவை
எண்ணிப் வியப்பதற்கு ஏற்றபடி
==இயற்கை பொழியுமந்த பொன்னொளியும்
விண்ணின் கரங்கொண்டு அழைக்கிறது
==வேதனை மனம்விட்டு மறைகிறது.
*மெய்யன் நடராஜ்