BODMAS

BODMAS
========
கணவனை சுமக்கும் மனமே
மகனையும் மகளையும் சுமக்கிறது
பிள்ளைகளை தாங்கும் மனமே
தாயையையும் ஏந்துகிறது
தாயை சுமக்கும் மனமே
தந்தையை சுமக்கிறது

தந்தையை சுமக்கும் மனமே
அண்ணனை சுமக்கிறது
அண்ணனை சுமக்கும் மனமே
அக்காவையும் சுமக்கிறது
அக்காவை சுமக்கும் மனமே தோழியை சுமக்கிறது

இங்கே சுமப்பது
ஒரே மனம் தான்
ஆனால் நிலைகள் (Priority)
மாறுபடுகின்றன
ஆதலால் பாசம் இல்லை
என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை



ஆதியும் அந்தமும் ஒன்றே

எங்கே தொடங்கினாலும்
தொடங்கிய இடத்திலேயே
முடிவும் .
முடிவும் தொடரும்...

Division is a way of Subtraction

Multiplication is a way of
Addition
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Apr-16, 9:56 am)
பார்வை : 1643

மேலே