மனிதநேய மரம்

விண்வெளிக்கு பறக்கலாம்
அண்டை வெளியை அளக்கலாம்
வான்வெளியை வலம் வரலாம்
சூழ்வெளியை கருத்தில் கொள்ள வேண்டாமோ?

வயல்வெளியை பரப்பாமல்
புல்வெளியை பெருக்காமல்
மண்வெளியாய் ஆக்கிவிட்டால்
வானுயர்வெளி நரகம் ஆகாதோ?

தினமும் மரம்நடு விழா தான்
மனிதநேயம் வளர்விழா தான்
இன்று நீ விழித்தெழா விட்டால்
நாளை பழிதீர்க்கும் உலகம்..

அண்டம் பாழ் கண்டம் பாழ்
உலகம் பாழ் உயிரும் பாழ்
வானம் பாழ் வளியும் பாழ்
நானும் பாழ் நீயும் பாழ்,

அன்பை நீராக்கி பரிவை உரமாக்கி
பாசத்தை மண்ணாக்கி உணர்வை விதையாக்கி
இன்றே விதை இப்போதே நடு
நாளை மரமாகும், மனிதநேய மரமாகும்.

எழுதியவர் : சுபாசுந்தர் (21-Apr-16, 9:10 pm)
பார்வை : 1924

மேலே