நினைவின் ஈரம்

நினைவின் ஈரம்...!
நான் -
முகர்ந்ததால்
சுருங்கிய
அனிச்சமே...!
எனக்குள் -
சிறு முள்ளாய்
முகிழ்ந்த நல்
விருட்சமே...!
முன் -
வெறும் கல்லாய்
தெரிந்த
மா மலையே...!
எனது -
கவியால்
எழுந்த
காலச் சிலையே...!
அதிகாலை -
அசோகமர
இலையெங்கும்....
அருவியோசையாய்
ஆல்லோலம்பாடும்
பறவைகளின்
பாட்டிசையில்...
பச்சரிசி -
பல்தெரிய...
பேசி வந்தப்
பேரழகே...!
பவழமல்லி
பனிசுமந்த...
மலர்முகம்
மோதி...
முத்தமிடும்
சிலிர்ப்பாக...
எதையோ கிறுக்கி
எடுத்து எறிய
இருந்த தாள்கள்...!
நான் -
விதையாய்
விழுந்து
முளைக்க...
கவிதை -
கனிகள் சுமந்த
கற்பக மரங்கள்..!
அற்புத -
காகித வரங்கள்..!
உன் -
வியர்வைமணியின்
ஆரந்தொட்டு
நனைந்த
கைக் குட்டைக்குள்...
என் -
நினைவின் ஈரம்
நீர்த்துப்போகாத
கனியின் சாராய்
உன் -
கைகளுக்குள் சேரும்...!