தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல் - 48 = 83
“மல்லுவேட்டி கட்டிப்போகும் மாமா
இந்த மைனாவை கொஞ்சிப்புடு ஆமா
நிக்கவச்சி சொக்கவைக்கும் மாமா
எனக்கு நச்சுன்னு இச்சுக்கொடு ஆமா..!”
“மல்லுவேட்டி கட்டிப்போகும் மாமா – என் மாமா.!
வெல்லக்கட்டி போலிருக்கேன் பாமா – உன் பாமா..!”
ஆத்தோரம் ரெண்டு குயில் போகுது – அது
சோலைக்குள்ள நின்னுக்குன்னு பாடுது
ரெண்டுல ஒண்ணு பிரிஞ்சாக்கா
மத்த ஒண்ணு சோகராகம் மீட்குது
சிப்பிக்குள்ள முத்துப்போல நான்தான்
என்னுள் முக்குளிக்க நீயும் வாயா
முக்குளித்து நீ போகும்போது
இன்ப கொப்பளங்கள் எண்ணிலடங்காது
“மல்லுவேட்டி கட்டிப்போகும் மாமா – என் மாமா.!
வெல்லக்கட்டி போலிருக்கேன் பாமா – உன் பாமா..!”
நாளு பாத்து கிழமை பாத்து
ஊரைகூட்டி உறவை சேத்து
அம்மி மிதிக்க மெட்டி சூட்டு
அய்யர் மந்திரம்ஓத தாலி கட்டு
முதலிரவில் புதுவுறவு தொடங்கும்
முழுமனதாய் இருவுடலும் தழுவும்
ஆய கலைகள் அறுபதும் பழகும்
அணு அணுவாய் இன்பம் சுகிக்கும்
“மல்லுவேட்டி கட்டிப்போகும் மாமா – என் மாமா.!
வெல்லக்கட்டி போலிருக்கேன் பாமா – உன் பாமா..!”