நிறங்கள் மாறலாம்

மூடிய விழிகளுக்குள்
மூன்றாம் உலகபோர் நடத்துகிறேன்
இருண்ட என் இரவுகளை
இமைகள் மூடி விரட்டுகிறேன்

காலைபனியாய்
என் காதுமடல் கடித்து
காதல் மொழி ஓதுகிறாய்
விரட்டிய இரவை
விரட்டிதேடி தோற்று
நான் விழித்து பார்க்கும் முன்
காணாமல் போய்விட்டாய்

வினாவுகின்றேன் விடைகளொ
நீ வெகுதூரம் என்று

அன்பே நீ சென்னைக்கு சென்றாயொ
இல்லை செவ்வாய்க்கு சென்றாயொ
உன்னால் சிவந்து நிற்க்கிறேன்
அரைத்த மருதாணியாய் நான்

நிறங்கள் மாறலாம் நாளாக
உன் நினைவுகள் மாறுமா ?

நீ வருவாய் வருவாய் என்று
வாடாத பூக்களால் வாசம் சேகரித்து
உன் வரவுக்காக காத்திருக்கிறேன்
நீதான் என் வாழ்வென்று எண்ணி....

எழுதியவர் : ராஜா (21-Apr-16, 11:24 pm)
Tanglish : NIRANGAL maralaam
பார்வை : 104

மேலே