புகலிடமும் அடைக்கலமும்
காதல் பூக்களின்
நந்தவனம்
நீ
உன் பார்வையில் தான்
அது
தினம் பூக்கும்...
கவிதைப் புறாக்களின்
வேடந்தாங்கல்
நீ
ஆகாயம் கொடு
அவை
உன் அடைக்கலம்
உன் முத்தச் சத்தம்
தான்
என் தேசிய கீதம்
காற்றிலாவது
மௌனமாய்
பாடி விடு
உன் கண்ணசைவில் தான்
கனவுகளுக்கு விடுதலை
என்னை இதயச்
சிறையிடு
ஆயுளுக்கும்
அடைத்திடு
நீயே
என் அடைக்கலம்
நான் உன்
புகலிடம்...