ELUTHU .COM

எழுது .காம்- நீ
புதிதாய்
விழுது விட்ட
ஆலமரம் .
கவி
மழலை பேசும்
எங்களுக்கு
நீ வார்த்தை தந்த
போதி மரம்.
எத்தனை நாள்
தூங்காமல்
எழுதி வைத்த
கவிதை எல்லாம்
பத்திரிக்கை
கிடைக்காமல்
பரிதவித்து
தவம் கிடந்தோம்
நான்
ஷெல்லியோ ,
ஷேய்க்ஸ் பியரோ
ஜான் மில்ட்டனோ
ஜான் கீட்சோ
கவி கம்பனோ
கண்ணதாசனோ
அல்லவே ;
வார்ட்ஸ் ஒர்த்தை
போல என்
வார்த்தைகளும் (words )
வொர்த்தாய் (worth )
இல்லவே .
ஆனாலும் நீ
கொடி தழுவ
நல் கொம்பாக
மடி தவழ ஒரு
தாயாக
தாய் மொழியாம்
தமிழ் மொழியில்
என்போன்ற
கத்துக்குட்டி
கவிஞர்களை
உருவாக்க வந்த
பிரம்மமே!!
உனக்கு எனது
வாழ்த்துப்பா .
தமிழிருக்கும்
காலமெல்லாம்
நீ சிறப்பாய்
நீ இருக்கும்
காலமெல்லாம்
நாங்களும்
வாழ்ந்திருப்போம்.

எழுதியவர் : (19-Jun-11, 3:04 am)
பார்வை : 386

மேலே