முதன் முதலாய்
முதல் முதலாய்...
வாழ்வில் முதல் முதலாய்..
இதழின் வழியே காதல் வழிந்தது
முதன் முதலாய்..!
உன்விரல், என் விரல், இசைந்து இணைந்தது
முதன் முதலாய்..!
தனிமையின் இனிமையை இரவினில் உணர்ந்தோம்
முதன் முதலாய்..!
என் கண்ணோரம் நீர் வழிய,
கண்மணியே நீ கண்டாய்
முதன் முதலாய்..!
நம் உறவைக் காக்க
நீ போரிட கண்டேன்
முதன் முதலாய்...!!
என்மடி நீயும், உன்மடி நானும்,
தலையனையாய்க் கொண்டோம்
முதன் முதலாய்..!
உணவுடன் அன்பும் சேர்ந்தே பகிர்ந்தோம்
முதல் முதலாய்...!!
உன்குரல் கேட்டே,
என் பொழுதுகள் விடிந்தது
முதன் முதலாய்...!!
என்னுள் காதலும் காமமும்
உன்னால் போரிட கண்டேன்
முதன் முதலாய்....!
உன்னை முழுதாய் உணரந்தேன்
முதன் முதலாய்...!
காதல் மிகுதியாய் வழிந்தது
முதன் முதலாய்..!!
உன்னால்..
என் வாழ்க்கை அழகாய் தெரிந்தது
முதன் முதலாய்..!!