எதிர் வீட்டு சன்னல்

பதினாறு வயதினிலே..
பருவ காற்று வீசையிலே..
எதிர் வீட்டு சன்னல் வழி..
பருவ மங்கை எட்டிப்பார்த்தால்!!

படுக்கை அரை சன்னல் அது!
பார்க்கத் தூண்டும் வயது அது!

அவள் வடிவத்தில் பழுதில்லை,
அழகிர்க்கோ குறைவில்லை!
மாடியிலே குடியேறி,
காத்திருப்பேன் அவளைக் காண.

சன்னல், கம்பி வழி காட்சி தந்து,
என்னை சிறைபிடித்தாள் தன் அழகால்!

விளக்கம் இல்லா மயக்கத்திலே..
மனதில், சலசலப்பு வந்து விட,
நானும் பருவமுற்றேன் அவளால்!!

நாளும் எட்டிப்பார்த்தே
என் பொழுதுகள் கழிய,
ஒரு நாள் மறைந்தே போனால் எங்கோ...

மூட பட்ட சன்னல்..
மீண்டும் திறந்தது ஒரு நாள்..
இம்முறை பருவ மங்கை காணவில்லை!
பின்பு நான் திரும்பிக்கூட பார்க்கவில்லை!!

நான்,
பருவத்தின் சுகம் காண
அன்று எனக்காக திறக்கப்பட்டது
அந்த எதிர் வீட்டு சன்னல்!!

எழுதியவர் : நேதாஜி (24-Apr-16, 9:54 am)
பார்வை : 270

மேலே