சேதி வரும் வரை காத்திருப்பேன்

சேதி வரும் வரை காத்திருப்பேன்
என் தேவதை உன்வழி பார்த்திருப்பேன்
ஆதி மனிதனாய் நான் ஆகிவிட்டேன்
என் ஏவாள் உனைக்காண தூதுவிட்டேன்

போகும் காற்றின் காதில் சொல்லிவைத்தேன்
அந்த பூக்கள் மணம்கொஞ்சம் கிள்ளிவைத்தேன்
வேகும் வெயில் வழி கடிதமிட்டேன்
அந்த ஈக்கள் மயங்கும்தேனை அனுப்பிவைத்தேன்

மேகம் ரெண்டை உன்னூர் போகச்சொன்னேன்
அந்த வானம் கிழித்துஒரு பாதைசெய்தேன்
தாகம் எனக்கு உன்னை காதலிக்க‌
அந்த பாதை பற்றியுந்தன் திசைதிருப்பு

வீரன் அல்ல நானும் கவர்ந்துவர‌
உன்னில் பித்துபிடித்த சின்னமனிதன் தானே
சூரன் அல்ல உன்னை தூக்கிவர‌
என்னை இழந்துதவிக்கும் அற்பபிறவி தானே

என் ஏவாள் உனைக்காண தூதுவிட்டேன்
ஆதி மனிதனாய் நான் ஆகிவிட்டேன்
என் தேவதை உன்வழி பார்த்திருப்பேன்
சேதி வரும் வரை காத்திருப்பேன்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 11:53 am)
பார்வை : 353

மேலே