இருள் சூழும் என் பொழுதுகள்

இருள் சூழும் என் பொழுதுகள்...
நிழலும் நீங்கி போகும் சோகம்...
புத்தனாகிவிட்டதாய் ஓர் எண்ணம்...
ஆசைகள் ஏக்கம் ஆகிவிட...
விருப்பங்கள் வெறுப்புகளால் நிரம்ப...
விடியலே வேண்டாம் எனறு...
அறையின் மூலையில் குறுகி படுத்துக்கொள்கிறேன்...
மென்மையாய் அழுகும் சத்தம் வரும்...
அதிலே ஆறுதல் வார்த்தைகளே கலந்திருக்கும்...
தலை சாயும் இடம் நனைந்திருக்கும்...