ஆனந்த பூங்காற்று

ஆனந்த பூங்காற்று என் இதயத்தின் வாசலிலே தென்றலாகி நுழைந்தடி
துள்ளிவரும் என் நெஞ்சுக்குள்ளே ராகம் பாடி கொஞ்சுகின்றாய்
என் நெஞ்சத்தில் வீசுகின்ற ஆனந்த பூங்காற்று தேனொழுக பாடுதடி
தென்றலாகி தீண்டுதடி
தென்றலாகி தீண்டுகையில்
மேனியெங்கும் பூவாடை வீசுதடி
என் கார்முகில் கூந்தலிலே நீ ஒளியவேண்டுமடா
என் தாவணி குடையினிலே தஞ்சமாக வேண்டுமடா
இமைக்காத என் விழிகள்
நீ வந்தால் இமைக்குமடா
திறக்காத என் இதயம் உனக்காக திறக்குமடா
நான் சிந்தாத வியர்வை எல்லாம்
நீ காதலில் வந்தபின்னே
மேனியெங்கும் பூக்குமடா வியர்வை பூக்கள்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (24-Apr-16, 1:10 pm)
Tanglish : aanantha poonkaatru
பார்வை : 235

மேலே