இரவுகளின் கோர பற்களில் சிந்தும் என் உதிரம்
சுலபமாய் சொல்கிறார்கள்
அவர்களுக்கெப்படி
தெரியும்
இரவுகளின் கோர பற்களில்
சிந்தும் என்
உதிரம்
குளிர்கால தனிமையில்
உஷ்ணம் தேடும்
உடலினது
உணவுத் தேடலில்
அவர்கள் இருந்ததுண்டா...?
வித வித
உரு கொண்டு வரும்
அவளின் நினைவு தீயில்
கருகும் என் மனதின்
துர்நாற்றம்
நுகர்ந்ததுண்டா...?
சொல்ல இயலா
உணர்ச்சிகளின்
செயல் வடிவ
வேதனைகள்
அறிந்ததும் உண்டா...?
ஆத்மாத்த கவிதை ஒன்று
பிறர் கையில்
கசங்குகையில்
வரும் கவிஞனின்
வலியை கண்டதுண்டா...?
இனியும் சொல்லாதீர்கள்
என்னை
சகஜமாய் இரு
என்று
இரத்த அணுக்களில்
கூட
உள்ளார்ந்து
ஊடுருவி இருக்கும்
அவள் முகத்தை
கிழித்தெடுக்கும் வலிமை
என்னிடமில்லை
போய் விடுங்கள்
என்றோ இறந்த பிணத்திற்கு
ஆறுதல் முலாம்
பூசி
நேரத்தை வீணாக்காதீர்கள்
சென்றுவிடுங்கள்