புடவை பூ பூத்தது

நான் கட்டும் புடவை இன்றேன் பூ பூத்தது
என்னைத் தொட்டுத் தழுவி தென்றல் ஹாய் என்றது
உன் நினைவுகளே..... நெஞ்சை ஆள்கின்றது.....
என் கனவுகளும்...... வாழ்க்கை வாழ்கின்றது....

இனிதான வருங்காலம் வரவேற்று அங்கே
உன்னோடு எனக்காக காத்திருக்கு..
வருகின்ற நாட்கள் வளம்தானே இங்கே
மனத்தோட்டம் மகிழ்வாய் பூத்திருக்கு.. (நான் கட்டும் புடவை...)

உனக்காக என்னை மாற்றிக்கொள்வேன் மாமா
தமிழ்நாட்டுப் பெண்ணாய் ஆனேனே
மணநாளைக் காண ஆர்வம்கொண்டேன் மாமா
தினமுன்னைக் கனவில் கண்டேனே
வருவாயா எனக்காய் பறந்து
வாழ்வோமே கவலை மறந்து
திருமணமும் நம்மை இணைக்க‌
இருமனமும் நன்றாய் பிணைக்க (இனிதான வருங்காலம்...)

எனக்காகப் பாடும் இளஞ்சோலைப் பெண்ணே
உன்காதல் பாதம் விழுந்தேனே
மணநாளும் கூடும் உற்சாகம் ஆடும்
தினம்கான தினமும் எழுந்தேனே
வருவேனே உனக்காய் பறந்து
வாழ்வோம்வா கவலை மறந்து
திருமணமும் நம்மை இணைக்கும்
இருமனமும் இன்பம் படிக்கும் (இனிதான வருங்காலம்...)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 12:25 pm)
பார்வை : 762

மேலே