மழையாக வருவேனடி உன்னை தேடி 555
அன்பே...
நீ என்னை வெறுத்து சென்றபோது
காற்றில் கலந்தேன்...
காற்றில் கலந்தும் உன்னை
தொட்டு செல்ல நினைக்கிறேனடி...
நான் தென்றலாக அல்ல
மழை தூறலாக...
நான் வரும் நேரம் நீ குடை நீட்டி
என்னை தடுத்துவிடாதே...
அப்போதும் என்
இதயம் தாங்காதடி...
கை நீட்டி
அணைக்க வேண்டாம்...
நீ கை நீட்டி
ரசித்தால் போதும்...
சுவாசத்தின் சந்தோசம்
நீ கொடுத்து செல்லடி.....