சுற்றுசூழல்

சுற்றுச்சுழல்
நமது வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் நாம் பயன் படுத்தும் நவீன கண்டுபிடிப்பு இயந்திரங்கள் தவிர்க்க முடியாததாகும்.இது நமக்கு பல தீ மைகளையும் தருகிறது. குறிப்பாக நாம் பயன்படுத்தும் கார்கள் வெளியிடும் புகை , நமது தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகை , நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிரீஜ் , ஏசீ ஆகியவை வீணாகும் போது வெளியிடும் chlorafloracarbon ஆகியவை பூமியை மாசடைய வைக்கிறது.
குறிப்பாக chlorafloracarbon ,ozone உடன் வேதிவினை புரிந்து ozone ஐ அழித்துவிடுகிறது…
இந்த சமயத்தில் நாம் global warming பற்றி அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம்…
புவிவெப்பமாதல் ( global warming)என்பது பசுமை குடில் வாயுக்களின் விளைவாக பூமி சராசரி வெப்பநிலையை விட உயர்வடைவது . குறிப்பாக புதை படிவ எரிபொருள்கள் (fossil fuel)எரிப்பது மற்றும் காட்டை அழிப்பதனால் ஏற்படுவது ஆகும்…
பூமிக்கு அருகில் இருக்கும் அடுக்கில்; உள்ள காற்று மண்டலத்தில் பல வாயுக்கள் உள்ளன. அவை ஆக்ஸிஜன் 21%,, நைட்ரஜன் 78%,மீதி பசுமை குடில் வாயுக்கள் 1% ….
பசுமை குடில் வாயுக்கள் என்பவை நீராவி, கார்பன்டை ஆக்ஸைடு,(கரியமிலவாயு) ,மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் ஓசோன் …
சூ ரியனிலிருந்து வரும் வெப்பம் வெளிச்சம் இரண்டையும் இந்த வாயுக்கள் வடிக்கட்டுகின்றன…
பூமிற்கு மேல் ஒரு குடைபோல இந்த வாயுக்கள் இருக்கின்றன.அதனால்தான் சூ ரியனின் கதிர்வீச்சு நேரடியாக பூமியைத் தாக்குவதில்லை…
பூமி வெளியிடும் அகசிவப்பு கதிர்களை (infraredray)உள்வாங்கி கொள்கின்றன (பசுமை குடில் வாயுக்கள்).பூமி கொஞ்சம் வெப்பத்தையும் வெளியிடுகிறது.அதையும் பசுமை குடில் வாயுக்கள் உறிஞ்சிவிடுகின்றன..அதை விண்வெளிக்கு ஒரு பகுதியையும் மறுபாதியை பூமிக்கும் அனுப்புகின்றன.இதன் காரணமாகவே சமச்சீரான வெப்பநிலையில் உள்ளது…
பூமிக்கு அருகில் உள்ள காற்று மண்டலத்தில் பல அடுக்குகள் உள்ளன..(ட்ரோப்போஸ்பியர்)அருகில் உள்ள அடுக்குக்கு பெயர் …
இதில் தான் பசுமை குடில் வாயுக்கள் உள்ளன. காற்று மண்டலத்தில் வெளி அடுக்குக்கு பெயர் (ஸ்;ரோட்டப்ஸ்பியர்) இங்கு தான் ஓசோன் வாயு உள்ளது . ஓசோன் சூ ரியனிலிருந்து வரும் தீமை விளைவிக்கும் புறஊதா கதிர்களை தடுத்து நிறுத்துகிறது….
காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனாலும், ஆக்ஸிஜனாலும் அகசிவப்பு கதிர்களை உள்வாங்கி கொள்ளவோ வெளியிடவோ முடியாது.எனவே காற்று மண்டலத்தில் இந்த இரண்டு மட்டும் இருந்தால் நம்மில் உயிர் வாழமுடியாது. எனவே பசுமை குடில் வாயுக்கள் முக்கியம்.
மனிதர்களாய் நாம் பசுமை குடில் வாயுக்களின் அளவை அதிகபடுத்தி உள்ளோம் பூமியை கிட்டதட்ட வாயு தொழிற்சாலையாக மாற்றிவிட்டோம்.
புவி வெப்பமாவதால் நம் தட்பவெப்பநிலையை மாற்றுகிறது.மழைகாலங்களில் சரியான மழை இல்லாமலும் வெயில்காலங்களில் அதிக வெப்பமும் மாறி மாறி நமது பருவ நிலையை மாற்றுகின்றன.
ஓசோன் படலம் ஓட்டையாவதால் அண்டார்டிக் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தும் கடல் நீர், நகரங்களின் உள்ளே வரும் அபாயம் உள்ளது…
சுற்றுச்சூ ழல் பாதுகாக்க செய்ய வேண்டியது:
நாம் பயன்படுத்தும் மின் சாதன பொருட்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களால் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துகிறோம். வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாம் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும்
 நாம் ஏற்கனவே; பயன்படுத்திய புதை படிவ எரிபொருள் முறையால் (fossil fuel), நாம் பூமியை மாசடைய வைத்து விட்டோம், நாம் மரபு சாரா எரிசக்திகளான சூ ரியஒளி ,காற்றாலை மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதை பற்றி அரசு பல விளம்பரங்கள் செய்த போதும் நாம் விழிப்புணர்வு அடையவில்லை.
 நாம் கிராமங்களில் பெரும்பாலான இடங்களில் open toilet வசதியை பயன்படுத்துகிறோம்.இது சுகாதாரத்திற்கு எதிரானது.நமது அரசால் அறிவிக்கப்பட்டுள்ள (swachh bharath ) தூய்மையான இந்தியா போன்ற இயக்கங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .நமது குழந்தைகளுக்கு போதுமான விழிப்புணர்வை கொடுக்க வேண்டும்.
 ஆறு குளங்கள் ஏரிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.மழைநீர் சேகரிக்கப்பட வேண்டும்.மழை காலங்களில் வரும் வெள்ளம் மற்றும் ஆற்றுநீர் பெரும்பாலும் கடலில் கலக்கிறது.இது பற்றிய போதிய விழிப்புணர்வு அற்று இருக்கிறோம.; நீர் மேலாண்மை சரிவரசெய்ய வேண்டும் மேலும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு முறைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 தெருவில் கிடக்கும் குப்பைகளை குப்பை தொட்டிகளில் போட்டு அதனை சரியான மேலாண்மை செய்ய வேண்டும். திட மேலாண்மை மற்றும் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல் போன்றவற்றை அதிகப்படுத்த வேண்டும்.பிளாஸ்டிக் பொளுக்கு மாற்றுபொருள் பயன்படுத்துவதை வரவேற்க வேண்டும்.(காகிதபை, காகித கப்)
 நாம் நம் வருங்கால சந்ததிகள் வாழும் வகையில் நம் பூமியை ஒப்படைக்க வேண்டும் அதற்கு மரங்களை நட்டு பூமியை காப்பாற்ற வேண்டும். நமது வீட்டை சுற்றி மரங்கள் நடுவதன் மூலம் இயற்கையான காற்று கிடைக்கிறது.
 மரங்கள் நடுவதால் நம் நாட்டில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளியிடும்
co 2 (கரியமில வாயுவை) சுவாசித்து ஆக்ஸிஜனை மரங்கள் வெளியிடுகிறது .இது மனிதனுக்கு அதிக நன்மைகளை செய்கின்றன.
 reference : சூ டாகும் பூமி---சூ சன்பிலிப்
prodigy

எழுதியவர் : mn பாலமுரளி (25-Apr-16, 1:35 pm)
பார்வை : 962

மேலே