ஆற்றங்கரை
ஆலம் விழுதினில் ஊஞ்சலாட
அழகுக் கிளிகளும் கொஞ்சிப்பாட
சின்னக் குருவிகள் சிந்துபாட
ஆற்றங்கரை ரொம்ப இனிமைதானே
வாலுச் சிறுவர்கள் நீச்சலடிக்க
நாலுச் சிறுமிகள் சிரித்துப்பேச
மாமன் மாமிகள் துணியைத்துவைக்க
ஆற்றங்கரை மிகவும் தூய்மைதானே
நீரில் ஆடிடும் வெள்ளிமீன்கள்
நிலவும் ரசித்திடும் ஆற்றுமணல்கள்
தென்றல் பேசிடும் நல்லகணங்கள்
ஆற்றங்கரை எனக்கு பிடிக்கும்தானே
நண்டும் தவளையும் கரணம்போட
சேற்றில் கால்களும் தாளம்போட
நீரில் உடலெல்லாம் குளிர்ந்துபோக
ஆற்றங்கரை உனக்கும் பிடிக்கும்தானே
இன்பத்தை கொடுப்பது ஆற்றங்கரை
புத்துணர்ச்சி அளிப்பது ஆற்றங்கரை
தூய்மையை பரிசளிக்கும் ஆற்றங்கரை
அதனைப்பற்றி கவிநூறு நாளும்படை...