வானுலக அறுக்கானி
வானுலக அறுக்கானி நீ
அழகான ராட்சஸி நீ
மழைதரும் கருமேகம் நீ
சுவைதரும் திராட்சை நீ.
நான் விரும்பும் கருப்பு நீ
என் கண்ணின் கருவிழி நீ
சுவை சேர்க்கும் கருப்பட்டி நீ
கூலிகேட்கும் செங்கரும்பு நீ.
உயிர்திரி ஒளியின் கருமை நீ
எனை கதி சேர்க்கும் கருப்புசாமியும் நீ.
Picture courtesy: Melinda Nagy