தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 33 - = 87
“சிந்தனை கடலில் முத்தெடுத்து
சிங்கார மாலை தொடுத்து வைத்தேன்
அந்திம நேரம் என் வஞ்சி வர...
தொடுத்த மாலையை சூடுகின்றேன் !”
“சூடிய மாலையில் சுகம் கோடியென்று
சுந்தர கண்ணனுக்கு கொடுத்தேன் விருந்து
கொடுக்க கொடுக்க போதாதென்று - நீ
தொந்தரவு செய்வது நியாயமன்று !”
சேமிப்பு கிடங்கில் சில்லரையை சேர்த்தால்
மாதா மாதம் வட்டி கிடைக்கும்
நாழிகை முண்ணூறு ஆகும்போது
வெளியே வந்து எட்டி உதைக்கும்
உதைக்க உதைக்க சந்தோஷம்
உதை வாங்கத்தான் இருக்குது பெத்தமனம்
அணைக்க அணைக்க இன்பம் கோடிபெறும்
எடுத்து சுவைக்க இதயம் இனிதே பாடுபடும்
வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு
உள்ளே செல்வது ஊழியன் வேலை
இரவு பள்ளியில் இன்பம் பயில
இருபாலாரை இணைப்பது ஆண்டவன் லீலை
இருவருக்குமிடையே ஒருவித கருத்து
நிலவும்போது இன்ப பெருக்கு
அன்றும் இன்றும் என்றென்றும்
காதல் என்பது காம கணக்கு !