கனவை விதைப்போம், நனவை அறுவடை செய்வோம்

தமிழனிடமிருந்து
தமிழ் பிரிகிறதோ இல்லையோ
இனி
மது பிரியக் கூடாது!
ஆண்டு எங்கு வேண்டுமானலும்
தொடங்கிவிட்டுப் போகட்டும்!
ஆனால் இனி அதிகாலைகள்
மதுக்கடைகளில்தான் பிறக்க வேண்டும்!

இரவுகளில்
முடிசூடிக்கொண்டது
சுதந்திரம் என்பார்கள்
நம்பிவிடாதீர்கள்!
இரவுகளில்
முடிசூடிக்கொண்டது
கள்ளத்தனங்கள்!

இந்திய இயற்கை வளங்களை
அந்நியர்கள் ஏன் கொள்ளையடிக்க வேண்டும்?
அந்நிய நாட்டும் பொருட்களை
அவர்கள் யார் இறக்குமதி செய்ய?
இனி, சுதந்திரமாக
நாம் இச்செயல்களைச் செய்யலாம்!
நமது நாட்டில்
முடிவெடுக்கும் உரிமை
நம்மையே சார்ந்தது!
ஏன், நமது பணத்தைக் கூட
அவர்களின் வங்கிகளில்
முதலீடு செய்வோம்!
அவர்கள் பொருளாதாரம்
நமது முதலீட்டை நம்பியுள்ளதாகப்
பெருமைப் பட்டுக்கொள்ளலாமே!

இயற்கைப் பொருள்கள் மட்டும் ஏன்,
நமது மனித வளத்தையும்
அவர்களுக்கு ஏற்றுமதி செய்வோம்!
நம் நாட்டில் வந்து
நம்மையே ஆட்சி செய்தார்கள் அல்லவா,
இனி அவர்கள் நாட்டில்
எல்லாம் நம்மால்தான் நடக்கும்!

தேர்தல்கள் வரும் போகும்!
இந்த மீட்சிப் போராட்டத்தை
-அந்நியர்கள் இனி
நம் கையை நம்பித்தான் இருக்க வேண்டும்
என்ற இந்தச் சுதந்திரத்தை
இனி நாம் கைவிடாமல் பார்த்துக் கொள்வோமாக!

இனி அவர்கள் முதலீட்டை
அவர்கள் நாட்டில் செய்ய விடாமல்
நம் நாட்டில் செய்ய வைப்போம்!
நம் நாட்டை விட்டு வெளியேறமுடியாத
எத்தனையோ பேர்களுக்கு
இங்கேயே நாம் வேலை வாய்ப்புகளை
ஏற்படுத்திக் கொடுக்கலாமே!
நம் உழைப்பை உலகமயமாக்குவோம்!
இயற்கை தாராளமயமாக்கிய
வளங்களை நாம் இனி
உலகமயமாக்குவோம்!

நாம் இனி
அந்நியர்களுக்குத்
தேனீர் கொடுக்கும்
கூலிகளென நம்மைக் கருத மாட்டோம்!
அந்நிய நாடு எதுவென்றாலும்
அங்கு முதலீடு செய்யும்
முதலாளியாவோம்!
பரம்பரைகளின் வீண் பெருமைகள் பேசாமல்
பரம்பரைகளில் மாற்றத்தை
உருவாக்கும் கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்!
எனக்கு ஓட்டுப் போடுங்கள்
இவைகள் நிச்சயமாக நிகழும்!
ஒவ்வொரு இந்தியனையும்
உலகமயமாக்கமல்
ஓய மாட்டேன்
ஜெய் ஹிந்த்!
வாழ்க பாரதம்!
================

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (26-Apr-16, 8:50 am)
பார்வை : 244

மேலே