புதியதோர் உலகம் செய்வோம்

ஓட்டை விழாத ஓசோன்
பருவம் தப்பாத மழை
வழி நெடுகிலும் மரங்கள்
இளைப்பாற நிழல்கள்
தாகம் தீர்க்கும் மோரும்
பசி போக்கும் பழைய சோறும்
திரும்பும் பக்கமெல்லாம் நீரும்
பச்சிலை வைத்தியமும்
பாசமுள்ள மக்களும்
அலைபேசி இல்லாமல் அலைத்த குரலுக்கு ஓடிவரும் சொந்தமும்
பாட்டி கதைகளும் பக்கத்து வீட்டு உறவுகளும்
தெருவில் விளையாடும் குழந்தைகளும்
கூடி கும்மியடிக்கும் குமரிகளும்
நடவு பாடல்களும் நாற்று நடும் பெண்களும் அறுவடை நெற்கதிர்களும் திருவிழாக்களும் தின்பண்டங்களும்
தத்தி தத்தி நடக்கும் சிட்டு குருவிகளும்
தாய்பால் போல் கொட்டும் அருவிகளும்
மண் பானை சமையலும்
மரத்தடி நிழல் உறக்கமும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையும்
கதவை திறந்து வைத்து காற்று வாங்கும் சுதந்திரமும்
பௌர்ணமி வெளிச்சமும் பால் நிலா சோறும் தென்னை மரங்களும்
திண்ணை கதைகளும் பம்பரமும் பாண்டி
ஆட்டமும் கோலியும் கில்லி தாண்டும்
இன்னும் எத்தனையோ பழமைகள் நிறைந்த
புதியதோர் உலகம் செய்வோம்
அதில்
புன்னகையோடு வாழ்வோம்

எழுதியவர் : yasmeen (26-Apr-16, 12:40 am)
பார்வை : 81

மேலே