கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை...
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
கூழை குடிக்க நினைத்தால்,
மீசைக்கு இடைஞ்சல் வருதே,
மீசைக்கு ஆசைப் பட்டால் கூழோ பாழ்,
கூழை மறப்பதா? மீசையைத் துறப்பதா?
என்ன கொடுமை சரவணன் இதென்று கலங்காதே மனமே,
ஸ்பூன் என்று ஒன்று உண்டு, ஸ்ட்ரா என்று ஒன்று உண்டென நீ அறியாயோ?
கூழையும் மறக்காது குடித்து, மீசையையும் துறக்காது, ஆசை தனை அடைந்திட,
வழி பல உண்டென நம்பி ஞாயமான ஆசைகளை அடைந்திடும் வழி அறிந்து அடைவாயாக...