மதி அதை மதி...
மதி அதை மதி
விதி என்பர் பலர்..
சதி என்பர் சிலர்.....
கதி என்பர் சிலர்......
நிதி என்பர் சிலர்.........
பதி என்பர் சிலர்...........
ரதி என்பர் சிலர்.............
நதி என்பர் சிலர்...............
நம்மில் பலர் இவற்றை காரணமாகக் கூற,
மதி என்றொன்று உள்ளதை மறப்பது தானே?
மதி கொண்டால் போதுமா? மதியினை உணர்ந்து,
மதியினை பண்படுத்தி, பகுத்தறிவோடு பயன்படுத்தி,
மதி மதித்து மகத்தான சாதனைகளை அரங்கேற்றலாமே.