உன்னை தேடும் கண்கள்

பதைத்து போன மனம்
பயத்தை கவ்விக்கொன்ற பயம்
எதிர்பாராத நொடிப்பொழுதில்
எட்டி உதைக்க தொடங்கிவிட்டான்,
என் வாரிசு...
மெல்ல மெல்ல எழுந்த வலிகள்
மேனியெங்கும் பரவின!
துளியில் தோன்றிய
உயிரொன்று
வெளியில் வந்திட அழைய,
வலியின் வலிமை வாய்விட்டு அழவும் தொடங்கிவிட்டேன்!
சுற்றும் முற்றும் சொந்தங்கள் தெரிகிறார்கள்!
இறுக்கும் கைகள் தந்தையிடம்,
உதைக்கும் கால்கள் தாயிடம்,
மறுபிறவி என்றதால் மரணபயம் என் கண்களில்,
என்னைச்சுற்றி எல்லோரும் இருக்க
என்னவனை மட்டுமே தேடும்
என் நெஞ்சம்
நரம்புகள் தோறும்
மின்சாரம் பாய
வெட்டி இழுத்த கால்கள்,
அத்தனை உறவுகள் அருகில் இருந்தாலும்
அன்பே உன் பார்வைதான் வலி போக்கும்!
என் அன்பு என்னவனே....!
~பிரேம்....

எழுதியவர் : பிரேம் (26-Apr-16, 5:57 pm)
Tanglish : unnai thedum kangal
பார்வை : 334

மேலே