ஒரு புரிதலான காத்திருப்பு

இது ஒரு நிலைப்பாடுள்ள
வாழ்வியலின் தொடக்கம்....
எதிர்காலங்களின்
வசந்த வாயிலில்
பருவம் பூத்திருக்கிறது !
ஒரு வண்ணத்து பூச்சியின்
வருகைக்கான
மாலைநேரத்து
தென்றலின் இதம் ...!
வரவேற்பு இல்லாமலே
தென்றல் வியாபித்த
கூடமெங்கும்
மல்லிகையின் மணம் ...!
ஆம்...இன்று நாளை
என்றுமே ...
பாரம்பரியத்தின்
சிகரம் தொட்ட
பார்வையின் மொழியில்
இனம்புரியா இன்பம்
விதைத்தபடி
கொண்டவனின்
வருகைக்கான
ஒரு புரிதலான
காத்திருப்பு !

..........கா.ந.கல்யாணசுந்தரம்

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (26-Apr-16, 9:44 pm)
பார்வை : 142

மேலே