வையகம் புகழ பெறுமே

காட்டிலே மழை பெய்தால்
நாட்டிலே களை கட்டும்
காட்டிலே பயம் என்றால்
நாட்டிலே நயம் தெளியும்


காடும் நாடும் ஒன்றுக்கொன்று
எதிர் மறையாக விளங்க
இருட்டும் வெளிச்சமும் ஒன்றன் பால்
கடினமும் எளிதும் விளைவிக்கும்.

காட்டிலே வாழ்க்கை காணின்
இன்னல் நிறைய கண்டு
பேரிடர் பெரும்பான்மை அறிந்து
நன்நிலை குறைவே என்று எண்ணி

நாட்டிலே வாழ்வு பயக்கின்
இனிமை மிகவே கண்டு
வன்செயல் மிதமாக வலிந்து
நன்று நின்று பெருகுமே


காடும் நாடும் சில கணங்களில்
அநேகமாக ஒன்றே புரிந்து
சற்று ஏறக்குறைய எனின்
அதுவல்லவே தீர்ப்பு. என்று கொள்


காட்டு மனிதன் அனாயசமாக
மேட்டிலும் காட்டிலும் கரடுமுரடிலும்
சுற்றி வலம் வந்து ஆங்காங்கே
காயும் பழமும் புசித்து.

பொங்காமல் பொரிக்காமல்
பச்சை யாக உண்பாண் உடனே
இறைச்சியும் கிழங்கும் அதிகமாக
உப்பும் உரைப்பும் இல்லாது.


நாட்டு மனிதன் நளினமாக
வானிலும் தரையிலும் வலி தெரியாது
கடலிலும் பறந்து நடந்து
ஊர்ந்து களிப்புடன்.



பக்குவமாக ஆக்கி பலவிதமாக
மணமுடனும் சுவையுடனும்
அரிசிச் சோறும் கூட்டும்
அவியலும் குழம்பும் கலந்து


எங்கு வாழின் காட்டிலோ
நாட்டிலோ மனிதன் மனிதனாக
வாழ்ந்தான் எனில்
வையகம் புகழ பெறுமே !

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (27-Apr-16, 5:19 pm)
பார்வை : 750

மேலே