ஒன்றுக்கு ஒன்று இலவசம்

ஒன்றுக்கு ஒன்று இலவசம்
******
அளவோடு குடித்து வளமோடு
வாழும் கொள்கையில்
அடிபிறழாமல் வாழும்
அன்புத் தலைவரே
@@@@
மது விரும்பிகளின்
ஒப்பற்ற பாதுகாவலரே,
@@@@
மது விரும்பிகள்
முன்னேற்றக் கட்சியின்
நிரந்தரத் தலைவரே,
@@@@
வருங்காலத் தமிழகத்தின்
நிரந்தர முதல்வரே,
மொடாக்குடியாரே, மாடசாமியாரே,
@@@
உலகம் போற்றும்
உன்னதத் தேர்தல் அறிக்கையை
தமிழர்களுக்கு அளித்த
உண்மைத் தலைவரே
@@@
பதிவியேற்குமுன்பே
பரிவோடு பரிசீலிக்க
உமக்கோர் வேண்டுகொள்
மது விரும்பிகள் சார்பாக
@@@@
சொல்லாததையும் செய்வேனென்று
உறுதி அளித்த உத்தமரே
@@@@
நீங்கள் சொல்லாமல் செய்யவிருப்பது
ஒரு பாட்டில் மது வாங்கினால்
ஒரு பாட்டில் மது இலவசம்
என்பது தான் எங்களுக்குத் தெரியுமே
@@@
பதவியேற்றவுடன் நீங்களிடும்
இரண்டாவது கையொப்பம்
ஒன்றுக்கு ஒன்று இலவசம்
என்பதாய் இருந்து
இன்ப போதையை
எங்களுக்கு ஏற்றுங்கள் என்பதே
எங்கள் வேண்டுகோள்.
@@@


இப்படிக்கு அன்புத் தொண்டன்
அளவுக்குடி கவிஞர் மதுநேசன்

எழுதியவர் : மலர் (27-Apr-16, 7:11 pm)
பார்வை : 412

மேலே